நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறீர்களா? - இதை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் அனைத்தும் கணினிமயமாக மாறியுள்ளதால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் சூழல் அதிகரித்துவிட்டது. இப்படி வேலை பார்ப்பதாலஇதனால் தான் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதன்னை சரி செய்வதற்காக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 

அதில், தினமும் 10½ மணி நேரத்திற்கும் குறைவாக அமர்ந்திருப்பவர்கள், கூடுதலாக 10 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே, அவர்களின் இறப்பு விகிதம் 15 சதவிகிதம் குறைவதாகவும், அதேசமயம் 10½ மணி நேரத்திற்கும் அதிகமாக அமர்ந்திருப்பவர்களின் இறப்பு விகித ஆபத்து 35 சதவிகிதம் குறைவதாகவும் தெரிய வந்துள்ளது.

நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் என்னென்ன நோய்கள் உண்டாகும்? 

உடல் பருமன், இதய நோய்கள், டைப் 2 டயாபடீஸ், சில வகையான புற்றுநோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது. இதனால் மற்ற நபர்களை விட இவர்களின் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. நீங்கள் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் உங்களின் தசைகள் செயல்படாமல் இருக்கிறது. இதனால் மெடபாலிஸம், ரத்த ஓட்டம் குறைந்து உடலில் வீக்கம் அதிகரிக்கிறது. 

இதனை எப்படி சரி செய்யலாம்..? 

15 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தாலே இதய நோய்கள் வரும் ஆபத்தை கணிசமாக குறைக்கலாம். அதேபோல் குறைந்தபட்சம் வாரத்தில் இரண்டு நாட்களாவது உடலை வலுப்படுத்தும் பயிற்சியில் அனைவரும் ஈடுபடு வேண்டும். குறிப்பாக 30 வயதில் இருப்பவர்கள் இந்தப் பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும். 

காரணம், 30 வயதை அடைந்ததும் மனிதர்களின் உடலில் உள்ள லீன் தசைகள் 10 வருடங்களுக்கு 8 சதவிகிதம் என்ற விகிதங்களில் குறையத் தொடங்குகிறது. 60 வயதில் இது 15 சதவிகிதமாக அதிகரிக்கிறது. இதை தடுப்பதற்கு அனைவரும் உடலை வலுப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to clear disease for sitting work at long times


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->