மழையும், சுகந்தமான மண் வாசனையும்.. மழை பெய்யும்போது மண் வாசனை இப்படி தான் வருகிறதா.?!  - Seithipunal
Seithipunal


அதிகாலையில் நம்மை எழுப்பும் கோழி சத்தம், கடிகாரங்கள் முதல் இரவு படுக்க செல்லும் வரை நமது வாழ்வில் இணைந்தே காணப்படுவது வாசனை.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு வாசனையை ரசிக்காமல் இருந்திருக்கவே முடியாது.

சிலருக்கு மலர்களின் மணம் பிடிக்கும், அதுவும் கிராமம் என்றால் மண் வாசனையை பிடிக்காதவர்களே இருக்க முடியாது.

மழை பெய்ய தொடங்கியவுடன் ஒருவிதமான வாசனை வருமே எவ்வளவு விலை கொடுத்தாலும் அதனை நுகர முடியாது! 

மழை பெய்தால் நாம் இரண்டு செயல்களை செய்யாமல் இருக்க மாட்டோம்.

ஒன்று, கையை நீட்டி ஒரு துளி மழை நீரையாவது பிடிப்பது...

மற்றொன்று முழுமூச்சாக மண் வாசனையை நுகர்வது.

நாம் பலமுறை மண் வாசனையை நுகர்ந்திருப்போம், சிலமுறை அது எப்படி உருவாகிறது? என்று யோசித்திருப்போம்.

மண் மீது மழைத் துளிகள் பட்டவுடன் வேதிவினை நடப்பதால் மண்வாசனை தோன்றுகிறது.

நிலத்தில் உள்ள 'அடினோசைட்" என்ற நுண்கிருமிகள் தான் மழைத் துளிகள் நிலத்தின் மீது பட்டவுடன் அவை மண்ணுடன் வினைபுரிந்து மண் வாசனையைக் கிளப்புகின்றன.

பழங்காலத்தில் உலகத்திற்கு கிடைத்த ஒரே வளம் மழை தான் என்பதால் நமது முன்னோர்களுக்கு மழை மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது. அந்த பண்பு மரபணுக்களின் மூலம் கடத்தப்பட்டு, நமக்கும் மண்வாசனை பிடித்தமான விஷயமாக இருக்கிறது என பல ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தரும் இந்த வாசனைக்கு காரணங்கள் பல இருந்தாலும் அது மனிதர்கள் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது.

மண் வாசனை ஏற்பட மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள், செடிகள், ஏன் இடி, மின்னல் கூட காரணமாக இருக்கலாம்

வறண்ட வானிலையால் நிலம் சூடாக இருக்கும். அப்போது ஒரு வகை நுண்ணுயிரியுடன் மழை நீர் கலக்கும்போது காற்றில் மண்வாசனையை அது தூண்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சத்துக்கள் நிறைந்த மண்ணில் தான் அந்த நுண்ணுயிரிகள் இருக்கும்.

சில ஆராய்ச்சியாளர்கள் மண்வாசனைக்கு செடிகள் தான் காரணம் என்கிறார்கள்.

சில செடிகளின் வேர்களில் வாசனைத் திரவியங்கள் இயற்கையாக உருவாகுமாம். அவை மழையுடன் கலக்கும்போது மண்வாசனையை உருவாக்குகின்றன.

மழை பெய்யும்போது இடி, மின்னல் ஏற்படும். அப்போது ஓசோன் படலத்தில் உள்ள வாசனைத் துகள்கள் காற்று மண்டலத்தில் கலக்குமாம். அது மண்வாசனையை உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How To Come Rainy smell in early Morming


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->