கோடை காலத்தில் சுவையான மசாலா மோர் செய்வது எப்படி?
how to make masala mor
தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் மோர் உள்ளது. மசாலா பொருட்கள் நிறைந்த மோரை குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி தருவதை போலவே ஊட்டச்சத்துக்களையும் மேம்படுத்த உதவுகிறது.
தேவையான பொருட்கள்:-

கெட்டியான புளித்த தயிர், கருவேப்பில்லை, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு.
செய்முறை:-
மிக்ஸி ஜாரில் கெட்டியான தயிரை சேர்த்து, அதில் கருவேப்பில்லை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து அரைத்து கலந்து கொள்ளவும். பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயப்பொடியை சேர்த்து கொள்ளவும். தேவைப்பட்டால் ஐஸ்கட்டிகளை சேர்த்தோ அல்லது காராபூந்தியை சேர்த்தோ சுவையான மசாலா மோரை பருகவும்.