உங்க வீட்ட 'கம கம' ன்னு மணக்க வைக்க இந்த பொருள்களை வேஸ்ட் என்று குப்பைல போடாதீங்க.? - Seithipunal
Seithipunal


நம் வீடு  நறுமணத்துடன் இருப்பதைத்தான் அனைவரும் விரும்பும்  அதற்காக செலவு செய்து விலை உயர்ந்த நறுமண திரவியங்களை வாங்கி பயன்படுத்துவோம். இவ்வாறு அதிக செலவு செய்து நறுமணப் பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக நாம் வீட்டில் பயன்படுத்திய காய்ந்த பூக்கள் மற்றும் வேர்க்கடலையின் தோள் ஆகியவற்றில் இருந்து வீடெங்கும் முழுவதும் நறுமணம் வீசக்கூடிய பொருளை தயாரிக்கலாம். அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

நான் வீட்டில் பயன்படுத்திய காய்த்த பூக்களை எடுத்து அவற்றை நன்றாக காய வைக்க வேண்டும். வீட்டில் பயன்படுத்திய வேர்க்கடலையின் தோலையும் இவற்றோடு எடுத்து காய வைத்துக் கொள்ளவும். பின்னறிவற்றை மிக்ஸியில் இட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும்.

இந்தப் பொடியுடன் கற்பூரத்தையும் நன்றாக அரைத்து கலந்து கொள்ளவும்  இந்தக் கலவையுடன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்  இரண்டில் ஏதேனும் ஒன்றை கலந்து கொள்ளவும். ஜவ்வாது இருந்தால் அதனையும் சிறிதளவு கலந்து உருண்டையாக பிடித்து  கொள்ளவும்.

இந்த உருண்டைகளில் ஒன்றை எடுத்து அகலில் வைத்து அதனுடன் ஒரு பிரியாணி இலையை பற்ற வைத்து  போட்டு விடவும். வீட்டில் கம்ப்யூட்டர் சாம்பிராணி இருந்தாலும் இவற்றுடன் சேர்ந்து பயன்படுத்தலாம். இல்லையென்றாலும் இதன் வாசம் கம கம வென வீடெங்கும் நறுமணம் வீசும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make our house smell good from waste products


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->