குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆப்பிள் ரபடி..! வீட்டிலேயே 5 நிமிடத்தில் செய்து அசத்துங்கள்..!
Kids favourite recipe
பொதுவாக நமது வீட்டு குழந்தைகள் புதிது புதிதாக உண்பதற்கு ஆசைப்படுவார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் உருவாக்கப்படும் துரித உணவுகள் உடலுக்கு கெடுதலையே அளிக்கிறது.
இதனால் வீட்டிலேயே குழந்தைகளுக்காக இயற்கையான, சுவையான ஆப்பிள் ரபடி எப்படி செய்வது என்பது பற்றி தற்போது காண்போம்.
தேவையான பொருட்கள் :
பால் - ½ லிட்டர்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் தூள் - ¼ தேக்கரண்டி
முந்திரி பொடி - 2 தேக்கரண்டி
ஆப்பிள் - 2
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை நன்கு காய்ச்ச வேண்டும்.
பின் ஆப்பிளை தோல் நீக்கி, துருவி வெறும் கடாயில் சூடுபட கிளறி வேண்டும்.
அடுத்து பால், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.
இவை திக்கான பதத்தில் வந்ததும் முந்திரி பொடி, ஏலக்காய்த்தூள், பாதாம் துருவல் ஆகியவற்றை சேர்த்து இறக்கினால் சுவையான ஆப்பிள் ரபடி தயாராகிவிடும்.