'அல்வா'வுடன் கலெக்டர் அலுவலகம் சென்ற நபர்.! நூதன முறையில் மனு.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி பகுதியில் ஜெகநாதன் என்பவர் ஆடு மேய்த்து குடும்பம் நடத்தி வருகிறார். கடந்த 2019ல் இவரது 12 ஆடுகளை வீட்டிற்கு அருகில் வசிக்கும் மூன்று பேர் விஷம் வைத்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இது பற்றி காவல் நிலையத்தில் ஜெகநாதன் புகார் அளித்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இது பற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை ஜெகநாதன் புகார் கொடுத்துள்ளார். ஆனால், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. 

இதில், ஜெகநாதன் அல்வாவுடன் வந்து நூதன முறையில் மனு கொடுத்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, "தன்னுடைய புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மூன்று ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுகிறேன். எனது ஆடுகளை திருப்பிக் கொடுத்து இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆனால், விசாரிக்காமல் எனக்கு அல்வா கொடுத்தவர்களுக்கு திருப்பி அல்வா கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் தான் அல்வாவை எடுத்து வந்தேன்." என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai men visit collector office with halwa


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->