ஆயுட்காலம் மிக குறைவாக உள்ள உயிரினங்களை காண்போமா!
Lets see creatures with very short lifespans
இந்த உலகில் அரிய வகை உயிரினங்களில் சில வகை உண்டு. இதில் நிறைய விலங்குகளின் ஆயுட்காலம் அதிகமாக நீடிக்கவும் செய்யும், சில விலங்குகளின் ஆயுட்காலம் மிக குறைவாகவும் இருக்கும். மேலும் ஒரு சில உயிரினங்கள் பிறந்த சில மணி நிமிடங்கள் உயிர்வாழ்ந்த பிறகு இறப்பதற்கான வாய்ப்புள்ளது என்று அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறைந்த ஆயுட்காலம் கொண்ட உயிரினங்கள்: பொதுவாக சில வகை உயிரினங்கள் குறைந்த ஆயுட்கலத்தை கொண்டுள்ளது. அவற்றின் ஆயுட்காலம் மற்ற உயிரினங்களை காட்டிலும் குறைவாக இருக்கும். அந்த வகையில் சீக்கிரமே இறந்து போகும் உயிரினங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
எறும்புகள் : எறும்புகளின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. இவை ஒரு வாரம் கூட நீடிக்காது. மேலும் தன்னுடைய புற்றிலிருந்து வெளிவந்து இயற்கைக்கு ஏற்ப உயிர் வாழ்ந்து இறந்து விடுகிறது.
தட்டான் பூச்சிகள்: தட்டான் பூச்சிகள் குறுகிய காலம் மட்டுமே உயிர் வாழக் கூடியது. இதில் ஆண் தட்டான் பூச்சிகள் ராணியுடன் இணைந்து இனச்சேர்க்கை செய்கிறது. இதன் பிறகு சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கஸ்ட்ரோட்ரிச்சா : இது நீர் நிலைகளில் வாழும் ஒருவகை உயிரினமாகும். மேலும் இது நன்னீரில் மிதக்கும் முதுகெலும்பில்லாத உயிரினமாகும். இந்த உயிரினம் குஞ்சு பொரித்த பிறகு இனப்பெருக்கம் செய்துவிட்டு கொஞ்ச காலம் மட்டுமே வாழ்ந்து இறந்துவிடும்.
வீட்டு ஈக்கள் : இந்த ஈக்களை பொதுவாக சமையல் அறைகள் என எல்லா இடங்களிலும் பார்ப்பதுண்டு. இவை வெறும் 4 வாரங்களில் இறந்துவிடும். இனப்பெருக்கம் செய்த பிறகு அடுத்த சந்ததிகளை தயார் செய்து விட்டு இறந்து விடுகிறது.
மே வண்டு : இவை ஒரு இரவு நேர விருந்தாளி ஆகும் . இந்த மேவண்டு சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழும் என தெரிவிக்கின்றனர். மேலும் மண்ணிலிருந்து வெளிவந்து இனச்சேர்க்கை செய்து முட்டை இடுகிறது. அதன் பிறகு தானாகவே இறந்து விடுமாம்.
மே ஃப்ளை : காற்றிலேயே நடனமாடக்கூடிய இந்த சிறிய பூச்சி 24 மணி நேரம் மட்டுமே உயிர் வாழக் கூடியது. இது விரைவான நேரத்தில் இனச்சேர்க்கை செய்து முட்டை இடுகிறது.
கொசுவினப்பூச்சி : இது பார்ப்பதற்கு கொசு போன்றே இருக்கும் மேலும் மாலையில் கூட்டமாக வந்து சலசலப்பு சத்தத்தை எழுப்பக் கூடியது. இது அதிகபட்சமாக ஐந்து நாட்கள் மட்டுமே உயிர் வாழக் கூடியது.
கொசு: உலகில் பலருக்கு தொல்லையாக இருக்கக்கூடிய கொசுக்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே வாழக்கூடியது. இது இனப்பெருக்கம் செய்து தன்னுடைய சந்ததியை விட்டுச் செல்கிறது. மேலும் அதிகபட்சமாக ஒரு மாதம் வரை வாழக்கூடியது.
English Summary
Lets see creatures with very short lifespans