சுவையான வாழைப்பூ சப்பாத்தி செய்வது எப்படி.?!
vazhaipoo chapathi preparation
தேவைப்படும் பொருட்கள்:
கோதுமை மாவு - கால் கிலோ
பாசிப்பருப்பு - 5 ஸ்பூன்
நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 7
பச்சைமிளகாய் - ஒன்று
பூண்டு - 2 பல்
சீரகம் - 2 சிட்டிகை
உப்பு - தே. அளவு
எண்ணெய் - தே. அளவு
தயிர் - 2 ஸ்பூன்
செய்யும் முறை:
வாழைப்பூவை நார் நீக்கி பொடியாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ளுங்கள். பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
அத்துடன் வாழைப்பூ, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும்.
சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.
இதை கோதுமை மாவுடன் சேர்த்து, தயிர், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். பிறகு சப்பாத்திகளாக சுட்டெடுத்துப் பரிமாறவும்.
English Summary
vazhaipoo chapathi preparation