அளவுக்கு அதிகமாக வெந்தயம் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?
venthayam benefits
சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக இருந்து வரும் வெந்தயம் பல வகையான மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இது ஆரோக்கியத்தின் சுரங்கம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த வெந்தயத்தில் போலிக் ஆசிட் காப்பர், பொட்டாசியம், இரும்பு சத்து, ஜிங்க், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
* உடலில் சுரக்கும் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. தாய் பால் சுரப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், பல்வேறு வகையான நோய்களை தீர்த்தாலும் அளவுக்கு அதிகமாக வெந்தயம் சாப்பிடுவதனால் ஒரு சில நோய்களும் ஏற்படுகின்றது. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்?
அதாவது, அளவுக்கு அதிகமாக வெந்தயம் சாப்பிடும்போது சர்க்கரையின் அளவை முழுமையாக குறைத்து இன்சுலினை அளவுக்கு அதிகமாக சுரக்க வைக்கிறது. இதனால், சர்க்கரை நோயாளிகள் வெந்தயம் சாப்பிடுவதற்கு முன்பு தங்களின் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
மேலும், இதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வயிற்றுப்போக்கு, செரிமான கோளாறு, தோல் நோய்கள், அரிப்பு, அலர்ஜி உள்ளிட்டவற்றை உடையவர்கள் கண்டிப்பாக வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது உடலில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.