உடல் எடையை குறைக்க வேண்டுமா.? அப்போ இந்த ஒரு ''டீ'' போதும்.! - Seithipunal
Seithipunal


லெமன் கிராஸ் டீ உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த டீயை அருந்தலாம். 

லெமன் கிராஸ் டீ செய்வதற்கு லெமன் கிராஸ், முருங்கை, புதினா, ஆளி விதை, பட்டை, சுக்கு, சோம்பு, கிராம்பு, கொள்ளு, தனியா போன்றவை தேவைப்படுகிறது. 

லெமன் கிராஸ் டீ குடிப்பதனால் உடல் எடை குறைகிறது. தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேறுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் லெமன் கிராஸ் டீயில் அதிக அளவில் உள்ளது. 

கெட்ட கொலஸ்ட்ராலை முழுமையாக குறைகிறது. ரத்தத்தின் சர்க்கரை அளவை சீர் செய்து இன்சுலின் சுரப்பை சரி செய்கிறது. செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவற்றை தடுக்கிறது. 

லெமன் கிராஸ் டீ செய்வதற்கு முதலில் பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் லெமன் கிராஸ், முருங்கை, புதினா, ஆளி விதை, பட்டை, சுக்கு, சோம்பு, சீரகம், கொள்ளு, தனியா போன்றவை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். 

இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் தண்ணீராக நன்கு சுண்டி வந்தவுடன் வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து அருந்தலாம். இதில் சர்க்கரை, நாட்டு சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை சேர்க்கக்கூடாது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

weight loss lemon grass tea in tamil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->