ஒரே வாரம் தான்... இதை சாப்பிட்டால் உடல் எடைக் குறைவதை உடனே பார்க்கலாம்.!
weight loss tips
தற்போதைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. இதனால், மக்கள் தங்களது உணவு முறையையும் மாற்றி அமைத்து வருகின்றனர். அந்த வகையில், உடல் எடையைக் குறைப்பதற்கான சில வழிமுறைகளை இங்குக் காண்போம்.
* காலையில் எழுந்ததும் காஃபி, டீயை தவிர்த்துவிட்டு எலுமிச்சை மற்றும் தேன் மற்றும் வெதுவெதுப்பான நீநீரை அருந்த வேண்டும். ஒரு நாளைக்கு சாப்பிட வேண்டிய காலை, மதிய மற்றும் இரவு உணவு ஒவ்வொன்றும் 300 முதல் 350 கலோரி வரை இருக்குமாறு பாத்துக் கொள்ளுங்கள்.
* ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு கிளாஸ் அல்லது அதிகபட்சம் ஒரு லிட்டர் வெதுவெதுப்பான நீரை குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி எடை இழப்பு பயணத்தை வேகப்படுத்தும். காலை உணவிற்கு முடிந்தவரை ஓட்ஸ் சாப்பிட முயற்சி செய்யுங்கள். ஓட்ஸ் சாப்பிடப் பிடிக்காதவர்கள் கார்ன் ஃபிளேக்ஸ் அல்லது முட்டைகளின் வெள்ளைக் கருவை காய்கறிகளை சேர்த்து ஆம்லேட் போட்டு சாப்பிட வேண்டும்.
* மதிய உணவிற்கு இடையில் பசித்தால் 10 பாதாம் அல்லது பிடித்தமான நட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். மதிய உணவிற்கு பிரவுன் ரைஸ் ஒரு கப், நிறைய காய்கறிகள் அடங்கிய சாலட், மற்றும் பருப்பு சாம்பார் ஒரு கப் எடுத்துக் கொள்ளலாம்.
* மாலை ஸ்நாக்ஸிற்கு ஒரு கைப்பிடி அளவு வேகவைத்த சுண்டல் அல்லது முளைக்கட்டிய பயிறுடன் கிரீன் டீயுடன் எடுத்துக் கொள்ளலாம். இரவு உணவுக்கு ஒரு கிண்ணம் வெஜ் சூப், ஒரு கிண்ணம் சாலட் அல்லது ஒரு பெரிய கிண்ணத்தில் பப்பாளி அல்லது காய்கறிகள் ஒரு கிண்ணம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து ஒரு வரம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைக் காணலாம்.