நரைமுடி பிரச்சனை இருக்கா.?! வீட்டிலேயே முடியை கருமையாக்க ஈஸியான டிப்ஸ்..! இதை ஃபாலோ பண்ணுங்க..! - Seithipunal
Seithipunal


இன்றைய நவீன காலத்தில் பெரும்பாலானோருக்கு வெள்ளை முடிபிரச்சனை மற்றும் முடி கொட்டுதல் போன்றவை சகஜமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக 30 வயதைக் கடந்த அனைத்து ஆண்களுக்கும் இதனால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

உணவு பழக்கவழக்கம், கூந்தலில் ரசாயனங்களின் பயன்பாடு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை இளநரை பிரச்சினைக்கு காரணமாக இருக்கிறது. இந்த காரணங்களால் கூந்தல் வயதுக்கு முன்பே வெள்ளையாக மாறத் தொடங்குகிறது.

இதனை அவமானமாகக் கருதும் இளைய சமுதாயத்தினர் வெள்ளை முடியை வேரோடு பிடுங்குவதால் ,தலை முடியின் வேர்களில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. அத்துடன் அகற்றப்பட்ட வெள்ளை முடிக்கு பதிலாக புதிய முடி வளர்வது நடக்காமல் கூட போகலாம். இதனை எப்படி சரி செய்வது என்பது பற்றி தற்போது காணலாம்.

வெள்ளை முடியை கருப்பாக்கும் பொருட்கள் :

வெந்தய விதைகள், பிளாக் டீ, நெல்லிக்காய் மற்றும் பாதாம் எண்ணெய், மருதாணி, எலுமிச்சை சாறு, கருவேப்பிலை, காபி, எண்ணெய் போன்ற பொருட்கள் வெள்ளை முடியை முழுவதுமாக கருப்பாக மாற்ற உதவுகிறது.

வெள்ளை முடி வளர்வதற்கான முக்கிய காரணமே முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இது மட்டுமின்றி வாழ்க்கைமுறை மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் முடி வெள்ளையாகிறது.

நாம் மேற்கண்ட பொருட்களை உணவு அல்லது தேங்காய் எண்ணெயில் சேர்ப்பதன் மூலமாக சிறிது நாட்களில் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

White hair problem tips


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->