அடி தூள்!!! ரூ. 2,000 கோடி ஒதுக்கீட்டில் ரூ.20,000 மதிப்புள்ள தரமான மடிக்கணினி- தங்கம் தென்னரசு - Seithipunal
Seithipunal


நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த 14-ந்தேதி 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறியது,' 2,00,000 கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக, ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்' என்று அறிவிப்பு வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, நேற்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, ரூ.10,000-ல் தரமான மடிக்கணினி எப்படி வாங்க முடியும்? என எம்.எல்.ஏ. தங்கமணி நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு நாளை (இன்று) பதில் அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இன்று பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு," 2,00,000  மாணவ- மாணவிகளுக்கான மடிக்கணினி ரூ.20,000 என்ற மதிப்பில் வழங்கப்படும்.

மாணவர்களுக்கு ரூ.20,000 மதிப்புள்ள தரமான மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது " எனத் தெரிவித்தார்.இதற்கு சபையில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2000 crore allocation for a quality laptop worth Rs 20000 thangam thennarasu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->