சென்னை, சேலம், திருச்சி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 24 பேர் கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி.! - Seithipunal
Seithipunal


சென்னை, சேலம், திருச்சி, தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட புகாரில் அதிமுகவினர் 24 பேர் கட்சியில் இருந்து நீக்கி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட சென்னை வடக்கு (கிழக்கு), சென்னை புறநகர், சேலம் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருச்சி மாநகர், திருச்சி புறநகர் தெற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்கள் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கழக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிடுதல் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகவும்; கழக வேட்பாளர்களுக்கு எதிராகவும், திமுக-வினருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றுகின்ற காரணங்களாலும், 

வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, H. வாசுகி (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் கிழக்கு பகுதிக் கழக மாவட்டப் பிரதிநிதி), M. ஹரிகிருஷ்ணன் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் கிழக்கு பகுதி மீனவர் பிரிவுச் செயலாளர்), A. குமார் (எ) கேபிள் குமார் (மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர்), G.V. பெருமாள் (மாவட்ட புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர்), M. கடல்ராஜன் (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர்).

சென்னை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, மெட்ரோ V. குமார்  (மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் ), V. பரமேஸ்வரி (மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ), N. நீலவேணி (சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி மகளிர் அணிச் செயலாளர்), J. கார்த்திக் (ஆலந்தூர் மேற்கு பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர்), C. ஜெயகோபால் (190 மேற்கு வட்டக் கழகச் செயலாளர், சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி), B. ராஜீ, (156 மேற்கு வட்டக் கழகச் செயலாளர், ஆலந்தூர் மேற்கு பகுதி), M.S. பாஸ்கரன் (194-ஆவது வட்டக் கழகச் செயலாளர், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி). 

சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, T. சேகர் (மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்), சிக்கந்தர் பாஷா (அஸ்தம்பட்டி பகுதி - 1 சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர்) , மஞ்சுளா கௌதமன் (47-ஆவது வட்டம்), கோவிந்தன் (4-ஆவது வட்டம்), 

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, ராமு (தளி பேரூராட்சி 2-ஆவது வார்டு கழக முன்னாள் செயலாளர்).

திருச்சி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, A. ஜெயராஜ் (22-ஆவது வட்டக் கழகச் செயலாளர்), T.T.C. பழனிச்சாமி, (46A வட்டக் கழகச் செயலாளர்), வரகனேரி P. ராஜேந்திரன், Ex. M.C., (திருச்சி கிழக்கு தொகுதிக் கழக முன்னாள் செயலாளர்). 

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, L. மோகன்தாஸ் (துவாக்குடி நகரக் கழக அவைத் தலைவர்) C. ரத்தினம் (துவாக்குடி நகர 12-ஆவது வார்டு கழகச் செயலாளர்). 

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த,  P.K. வெள்ளத்துரை (கோவில்பட்டி நகர 23-ஆவது வார்டு கழகச் செயலாளர்),  A. பரமசிவன், (கோவில்பட்டி நகர 6-ஆவது வார்டு கழக முன்னாள் செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 members dismissed from the admk party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->