ராமநாதபுரம் தொகுதியில்.. "6 பன்னீர்" செல்வத்தின் வேட்பு மனுக்களும் ஏற்பு.!!
6 paneerselvam nominations accepted in Ramanathapuram
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழுவுக்கு ராமநாதபுரம் தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் பெயரில் நான்கு பேர் வேட்பு மனு தாக்கல் செய்தது அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் கடைசி நாளான நேற்று மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிமீதான பரிசீலனை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்த 5 பன்னீர் செல்வங்களில் வேட்பு மனுக்களும் தேர்தல் அதிகாரிகளால் ஏற்கப்பட்டுள்ளது.
இதனால் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து 5 பன்னீர்செல்வங்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனால் முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
English Summary
6 paneerselvam nominations accepted in Ramanathapuram