நிதிஷ்குமார் கட்சியிலிருந்து முக்கியப் புள்ளி ஒருவர் பதவி விலகல்!...பின்னணியில் பாஜக அழுத்தம்? - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் ஜேடியு கட்சி ஆட்சி அமைத்துள்ள நிலையில்,  அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.சி.தியாகி நேற்று திடீரென ஜேடியு கட்சியில் இருந்து விலகியிருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செய்தித் தொடர்பாளராக தியாகி பதவி வகித்து வந்த நிலையில், அவர் பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்ததை அடுத்து, அவருக்குப் பதிலாக ராஜீவ் ரஞ்சன் பிரசாத் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே சில முக்கிய விவகாரங்களில் தலைமையின் அனுமதி இல்லாமல் கே.சி.தியாகி அறிக்கைகளை வெளியிட்டதாகவும், பாஜக கூட்டணியில் இருந்துகொண்டே அக்கட்சியை விமர்சிப்பதும், இதுகுறித்து பாஜகவும் நிதிஷிடம் எடுத்துக் கூறியதன் விளைவாகவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இருந்த போதிலும், பாஜகவின் அழுத்தம் காரணமாகவே தியாகியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்யச் சொன்னதாகத் தகவல் வெளியான நிலையில், இதை அக்கட்சியின்  வட்டாரங்கள் முற்றிலும் மறுத்துள்ளது. இந்நிலையில் ராஜினாமா குறித்து பேசியுள்ள கே.சி.தியாகி, தேசிய செயற்குழு கூட்டத்தின்போது எனக்கு மீண்டும் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் மற்றும் அதன் ஆலோசகர் பொறுப்பு வழங்கப்பட்டது என்றும், ஆனால் இப்போது வயது காரணமாக இந்த வேலையை என்னால் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A key point from Nitishkumars party is resignation BJP pressure in the background


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->