பாஜக அலுவலகத்தை முற்றுகையிடப்போகும் ஆம் ஆத்மி - காரணம் என்ன?
aam athmi strike bjp head office in delhi
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு கடந்த திங்கள் கிழமை ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் சென்றபோது அவரின் தனி உதவியாளர் பிபவ் குமாரால், தான் கடுமையாக தாக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் படி கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, டெல்லி காவல்துறையினரால் பிபவ் குமார், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தை முற்றுகையிடப்போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும், ஆம் ஆத்மி தலைவர்களுடன் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெறும். நீங்கள் விரும்புபவர்களை சிறையில் அடையுங்கள். பாஜகவினர் சிறை விளையாட்டு விளையாடுகின்றனர் என்று விமர்சனம் செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக, பிபவ் குமார் தனது முன் ஜாமீன் மனுவை திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டப்போது, பொய் குற்றச்சாட்டுகள் தன்மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும், எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி டெல்லி காவல்துறை தன்னை கைது செய்துள்ளதாக பிபவ் குமார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார். இந்த நிலையில் தான் ஆம் ஆத்மி முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளது.
English Summary
aam athmi strike bjp head office in delhi