அதிரடி பேச்சு! இந்தி திணிப்பு என்பது தவறான வாதம் - டி.டி.வி. தினகரன்...
Action speech Hindi imposition is a false argument TTVDhinakaran
ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது," தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை இளைஞர்களை சீரழித்து வருகிறது. இதை, ஆளும் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் போலீசாரால் போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

டி.டி.வி தினகரன்:
மேலும் மு.க.ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு மீது பழி போட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு என்று கூறுவது தவறான வாதம். தற்போதைய காலத்திற்கு ஏற்ப மூன்றாவதாக ஒரு மொழியை கற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினால் தமிழகத்திற்கு வேண்டியதை மோடி நிச்சயம் செய்வார். தி.மு.க.வுக்கு எதிராக தமிழக மக்கள் உள்ளனர். எனவே மீண்டும் மொழிப்போர் எனப் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்" என அவரது கருத்தினைத் தெள்ளத்தெளிவாக தெரிவித்திருந்தார்.
English Summary
Action speech Hindi imposition is a false argument TTVDhinakaran