அதிமுகவா? திமுகவா? தவெகவா? 9 தொகுதி ஓகே சொன்ன கட்சி? உடைந்த கூட்டணி?! பரபரப்பு தகவல்!
ADMK BJP Alliance DMDK DMK TVK
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் நேற்று அறிவித்தார்.
மேலும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளதாகவும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும் எனவும் அமித் ஷா தெரிவித்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியாகிய பிறகு, என்டிஏ கூட்டணி மேலும் விரிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை விரைவில் தொடங்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார் என்று அந்த தகவல் தெரிவிக்கின்றது.
மேலும், தேமுதிகவுடன் நேற்று அ.தி.மு.க. தரப்பினர் அக்கட்சியினரிடம் முதல்நிலை பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், தேமுதிக 10 தொகுதிக்கு மேல் கேட்டதாகவும், அதற்க்கு அதிமுக தரப்பில் 9 தொகுதிகளை வழங்க முடியும் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ கட்சி இண்டி கூட்டணியில் ஐக்கியமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் தேமுதிகவும் தவெக, திமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
English Summary
ADMK BJP Alliance DMDK DMK TVK