1000 கோடி ஊழல்... திமுக அரசுக்கு ஆப்பு வைக்க அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!
ADMK EPS Amitshah meet Delhi
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முக்கிய விவகாரங்களை எடுத்துச் சொன்னார். இன்று சென்னை திரும்பிய பிறகு, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
பாஜகவுடன் கூட்டணி குறித்து எந்த பேச்சும் நடத்தவில்லை. நாங்கள் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாகவே அமித்ஷாவை சந்தித்தோம்.
முக்கியமாக கோதாவரி-காவேரி இணைப்பு திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும் வலியுறுத்தியுள்ளோம். மேகதாது அணை தொடர்பாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நடைபெறக்கூடாது.
மத்திய அரசு கர்நாடக அரசை இந்த திட்டத்திலிருந்து பின்னடைய வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், அதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.
தமிழ்நாட்டில் நடந்த டாஸ்மாக் ஊழலை CBI முழுமையாக விசாரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.
மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் பரவல் போன்றவை குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. கூட்டணி பற்றிய முடிவுகள் தேர்தல் நெருங்கும் போது மட்டுமே தெரிவிப்போம்" என்றார்.
English Summary
ADMK EPS Amitshah meet Delhi