தப்பிக்கலாம் என்று நினைக்காதீர்கள்! ஸ்டாலின் தான் பொறுப்பு - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேரின் உயிரிழப்புக்கு தமிழ்நாடு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது, "வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

லட்சக்கணக்கான மக்கள் கூடிய காரணத்தினாலும், தமிழ்நாடு அரசு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத காரணத்தினாலும் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத காரணத்தினால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை ஏற்று லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் கூடினார்கள். தமிழ்நாடு அரசு தக்க ஏற்பாடுகள் செய்திருந்தால், இவ்வளவு பெரும் சேதம் ஏற்பட்டு இருக்காது.

திட்டமிட்டு முன்கூட்டியே அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்க வேண்டும். அரசின் செயலற்ற தன்மையை இது காட்டுகிறது.

ஏதேதோ காரணங்களை சொல்லி தப்பிக்க பார்ப்பது தமிழக அரசுக்கு அழகல்ல. 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? லட்சக்கணக்கானோர் கூடும் போது உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டாமா? 

இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Condemn to CM STALIN and DMK Govt chennai Air show


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->