அந்த செய்தியை போடாதீங்க! பத்திரிகை, ஊடகங்களை மிரட்டுகிறதா ஆளும் திமுக! எடப்பாடி பழனிசாமி பகீர் பேட்டி! - Seithipunal
Seithipunal


12 மணி நேரம் பணி செய்ய, மனிதர்கள் ஒன்றும் எந்திரம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிதெரிவித்துள்ளார்.

இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தாவது, "தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் பணி, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் இது இருந்தால்தான், அவர்களால் சரியாக பணி செய்ய முடியும்.

ஆனால் இவர்கள் தொழிலாளர்கள் இயந்திரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்விட்சை ஆன் செய்தால் எந்திரம் ஓடுவது போல மனிதர்களும் ஓடுவார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள். 

மனித வாழ்க்கை அப்படி கிடையாது. 12 மணி நேரம் ஒரு தொழிலாளரால் எப்படி பணி செய்ய முடியும்? இந்த சட்ட மசோதாவுக்கு  திமுகவின் கூட்டணி கட்சிகளை எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இதுவரை திமுகவின் கூட்டணி கட்சிகள் எதற்கும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை.

தமிழகத்தில் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அது குறித்து எல்லாம் எந்த எதிர்ப்பையும் அவர்கள் கொடுத்ததே கிடையாது. அப்படியான கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், இந்த விவகாரத்தின் ஆழம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலாளிகளுக்கு இந்த விடியா அரசு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளது. ஸ்டாலின் எப்பொழுதுமே எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சும், ஆளுங்கட்சியாக வந்ததற்கு பிறகு ஒரு பேச்சையும் பேசுவார். இது அவரின் வாடிக்கை.

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை அவர் ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்தார். இப்போது அதை அவரே கொண்டு வந்து இருக்கிறார்.

அப்பொழுது செய்தியாளர்கள் நீங்கள் இந்த சட்ட மசோதாவை எதிர்க்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, நாங்கள் தான் ஏற்கனவே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து விட்டோமே. நான் அன்றைய தினம் 2 மணி நேரம் சட்டப்பேரவையில் தமிழகத்தில் நடக்கும் கொலை கொள்ளை திருட்டு வழிப்பறி பாலியல் வன்கொடுமை இப்படி ஒரு முக்கியமான விவகாரங்களை எடுத்து உரையாற்றினேன்.

அது குறித்து ஏதேனும் ஒரு செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டீர்களா? ஒருவேளை ஆளும் அரசின் மிரட்டலுக்கு கட்டுப்பட்டு நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்களோ. சட்டப்பேரவையில் நான் ஆற்றிய உரையை எந்த ஊடகமும் வெளியிடக்கூடாது என்று உங்களை மிரட்டி இருப்பதாகவே எனக்கு தெரிகிறது" என்றார். 
 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Condemn to DMK Govt for Assembly Speech news telecast


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->