எடப்பாடி பழனிசாமியின் திடீர் டெல்லி பயணம் – வெளியான பரபரப்பு தகவல்!!
ADMK EPS Delhi visit
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காலை 11.15 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார். அதிகாரப்பூர்வமாக, புதியதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை பார்வையிட செல்லிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அவரது திடீர் பயணம் கூட்டணி தொடர்பான முக்கிய கலந்துரையாடலாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
தற்போது, திமுக கூட்டணி நிலைப்பதா?, அ.தி.மு.க – பாஜக மீண்டும் இணைவதா?, விஜய் தனது புதிய கட்சிக்காக யாருடன் கூட்டணி அமைப்பார்? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையிலேயே, பாஜக முக்கிய தலைவர்களை நேரில் சந்திக்க, எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருக்கிறார் என்பதும் தகவலாக வந்துள்ளது.
இதனால், அடுத்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அ.தி.மு.க – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் வாய்ப்பு உள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
இருப்பினும், இபிஎஸ் பயணத்தின் உண்மையான நோக்கம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.