ரூ.1000 கோடி ஊழல்: ஸ்டாலின் மாடல் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி பேட்டி!
ADMK EPS DMK Mk Stalin Govt TASMAC Scam
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது, இதில் 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இன்று கூட்டத்தொடர் தொடங்கியதும், மதுபான முறைகேடு குறித்து விவாதிக்கக் கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அதிமுகவினரின் கடும் எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் பட்ஜெட் தாக்கல் நடைபெறவே, அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்புச் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "டாஸ்மாக் ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் மாடல் அரசு ராஜினாமா செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதற்கிடையே, இன்று காலை எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ADMK EPS DMK Mk Stalin Govt TASMAC Scam