அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ்? எதிரிகளை வீழ்த்த கூட்டணி அமைப்போம் - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!
ADMK EPS Election 2026 Alliance DMK BJP TVK
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுகவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), தினகரன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு முற்றிலும் இல்லை என உறுதியாக தெரிவித்தார்.
சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற தொகுதி மறுவரை தொடர்பாக தில்லியில் திமுக எம்பிகள் போராட்டம் நடத்தியது, மக்களை திசைதிருப்பும் உத்தியாகவே பார்க்கப்பட வேண்டியது என விமர்சித்தார். "அந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்பிகள் கூட பங்கேற்கவில்லை. இதில் அவர்கள் இருந்தால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி பெற்றதாக கருதலாம்," என்றார்.
அதிமுகவின் நிலை தெளிவாக உள்ளது – "சசிகலா, ஓபிஎஸ், தினகரன் மீண்டும் கட்சியில் சேர வாய்ப்பே இல்லை. அதிமுக தற்போது ஒரு உறுதியான வழியில் சென்று கொண்டிருக்கிறது," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கூட்டணி பற்றி எப்போது முடிவு?
தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பான முடிவுகள் பின்னர் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
"கொள்கை நிலையானது – கூட்டணி காலத்திற்கேற்ப மாறும்" என்று குறிப்பிட்ட பழனிசாமி, தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்தும் வகையில் யோசித்து கூட்டணி அமைக்கப்படும் என்றார்.
"திமுக ஆட்சியில் பாதுகாப்பு கேள்விக்குறி"
திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை; நாளைய நிலை மேலும் மோசமாக இருக்கலாம் என எச்சரித்தார்.
English Summary
ADMK EPS Election 2026 Alliance DMK BJP TVK