தேசியமும், தெய்வீகமும்: பசும்பொன் செல்லும் எடப்பாடி பழனிச்சாமி - வெளியான முக்கிய அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-ஆவது பிறந்த நாள் மற்றும் 62-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு, வரும் 30 ஆம் தேதி அவரின் நினைவிடம் சென்று மரியாதையை செலுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், "தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்' என்று பிரகடனப்படுத்தி, தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த, பல்வேறு சிறப்புகளுக்குரிய உள்ளதத் தலைவராம், போற்றுதலுக்குரிய தேவர் திருமகனாரின் 117-ஆவது பிறந்த நாள் மற்றும் 62-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு, 30.10.2024 - புதன் கிழமை காலை 10.30 மணியளவில், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நிருமகளாரின் நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K. பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். 

தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும்; 

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், 

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்துக் கொண்டு தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Pasumpon Devar Jayanti Program


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->