வெளிநாட்டிற்கு செல்லும் அண்ணாமலை நல்ல பண்புகளை கற்று வரட்டும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ..! - Seithipunal
Seithipunal



மதுரை மாவட்டம் பரவை ஊர்மெச்சிக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள புதிய வகுப்பறைக் கட்டிடத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். இது அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட கட்டிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் தற்போது நடந்து வரும் பல்வேறு செய்திகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை எந்த ஒரு வளர்ச்சிப் பணிகளையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை.

நாங்கள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நிலுவையில் உள்ள 10 திட்டங்கள் குறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினோம். ஆனால் இதுவரை அதில் ஒன்றை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்த பயனும் இல்லை.

மதுரை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் அம்ருத் குடிநீர் திட்டம் இன்னும் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது" என்று தெரிவித்தார். அடுத்ததாக அண்ணாமலை லண்டன் செல்வது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "அரசியல் படிக்க லண்டன் செல்லும் அண்ணாமலை, அங்கு நன்றாக படிக்கட்டும். 

லண்டனில் அவர் நல்ல பண்புகளைக் கற்றுக் கொண்டு வரட்டும். மறைந்த தலைவர்களை இழிவாக பேசக் கூடாது என்பதை அவர் வெளிநாட்டில் கற்று வரட்டும்" என்று  தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EX Minister Sellur Raju Speaks About BJP Leader Annamalai


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->