அதிமுக அலுவலக கலவர வழக்கு : மீண்டும் சிபிசிஐடி விசாரணை! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஓ.பன்னீா்செல்வம், கே.பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளா்களிடையே கலவரம் ஆனது. அக்கலவரத்தில் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டு பொருள்கள், ஆவணங்கள், சேதப்படுத்தப்பட்டது.

 அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் ஜூலை 23-ஆம் தேதி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் கடந்த  13-ஆம் தேதி ஓ.பன்னீா்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோா் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டது. 

அவ்வழக்கின் மீது நடவடிக்கை எடுக்காததால் காவல்துறை மீது விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கடந்த 7-ஆம் தேதி சிபிசிஐடி அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் சோதனையிட்டு வழக்குத் தொடா்பாக பல முக்கிய தடயங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து சென்றனர்.

மேலும், விசாரணைக்கு ஆஜராகுமாறு, அதிமுக அலுவலகத்தின் மேலாளா் மகாலிங்கத்துக்கு சம்மன் அனுப்பியத்தின் பேரில், நேற்று சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் அவருடன் சுமாா் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று அதிமுக தலைமை அலுவலகம் வந்த சிபிசிஐடி போலிஸார், அலுவலக ஊழியர்களிடம் கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK head office case CBCID police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->