அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்ன விவகாரம்: களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்!
ADMK irattai ilai Election commission Edappadi pazhanisamy
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க.வில் தலைமைக்கு ஏற்பட்ட மோதல் இன்னும் நீடிக்கிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட அதிகாரப்போரை, எடப்பாடி பழனிச்சாமி பெரும் ஆதரவுடன் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் தனி அணியாகப் பிரிந்து செயல்படுகிறார். மேலும், எடப்பாடியின் தேர்வு சட்டப்படி செல்லாது எனக் கூறி தொடுக்கப்பட்ட வழக்குகள் பெரும்பாலும் தள்ளுபடியாகிய நிலையில், தற்போது ஒரு வழக்கே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதிலும், “இரட்டை இலை” சின்னத்தை எடப்பாடி பயன்படுத்துவதில் தடையில்லை எனக் கூறி, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தத் தொடங்கியது.
இதற்க்கும் உயர்நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதிக்க, அந்த தடை நீக்கப்பட வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையத்துக்கு விசாரணை மேற்கொள்ளலாம் என அனுமதி வழங்கியது.
இதனையடுத்து, தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்ன விவகாரத்தில் முக்கியமான ஆறுபேரிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளது.
இந்த விசாரணை ஏப்ரல் 28ம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதற்கான அழைப்பாணைகள் சம்மந்தப்பட்டவர்களுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
ADMK irattai ilai Election commission Edappadi pazhanisamy