அதிமுகவில் அதிரடி மற்றம்: அதிமுக ஐடி விங் தலைவரை மாற்றிய எடப்பாடி பழனிச்சாமி!  - Seithipunal
Seithipunal


அதிமுக ஐடி விங் தலைவராக கோவை சத்யனை நியமித்து உத்தரவிட்டுள்ளார், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

மேலும், ஐடி விங் தலைவராக இருந்த சிங்கை ராமச்சந்திரன், மாணவரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் S.R. விஜயகுமார், Ex. M.P., துணைச் செயலாளர் கோவிலம்பாக்கம் C. மணிமாறன், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் சிங்கை G. ராமச்சந்திரன், இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் M. கோவை சத்யன் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணிச் செயலாளர், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மற்றும் கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

அனைத்திந்திய கழக  மாணவர் அணி செயலாளராக சிங்கை G. ராமச்சந்திரன் நியமிக்கப்படுகிறார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக S.R. விஜயகுமார் நியமிக்கப்படுகிறார்.


அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளராக கோவிலம்பாக்கம் C. மணிமாறன் நியமிக்கப்படுகிறார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராக M. கோவை சத்யன் நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று எடப்பாடி K.பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK IT Wing Leader change


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->