போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக எம்எல்ஏ., கறுப்புக்கொடி கொடியுடன் 2000 பேர்.!
admk mla protest july
பரங்கிப்பேட்டை : சாமியார்பேட்டையில் சுருக்குமடி வலைக்கு எதிராக கருப்பு கொடியுடன் 2000 மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏ.,வும் கலந்துகொண்டார்.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் சுருக்குமடி வலைக்கு எதிராக கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி வீராம்பட்டினம் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பரங்கிப்பேட்டை விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலை, இரட்டை மடி வலை மற்றும் அதிக திறன் கொண்ட இன்ஜின் படகுகள் தற்போது அதிக பயன்பாட்டில் உள்ளது. இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இதனை தடுத்து நிறுத்தக்கோரி சாமியார் பேட்டையில் வருகின்ற 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்ட நிலையில், இன்று ( 9-ம் தேதி) காலை சாமியார்பேட்டையில் 2000 மேற்பட்ட மீனவர்கள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 30 கிராம மீனவர்களும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.