பெங்களூர் புள்ளியால் ஓபிஎஸ் மீது எழுந்த குற்றச்சாட்டு., நேற்று என்ன நடந்தது.?!  - Seithipunal
Seithipunal


ஓ பன்னீர் செல்வத்தை புகழேந்தி சந்தித்தது ஏன் என்பது குறித்து, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பதிலளித்துள்ளார். 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் நேற்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி சந்தித்து பேசினார். 

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி, ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசியது கட்சி விரோத நடவடிக்கை என்று, எடப்பாடிபழனிசாமி ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

இது தொடர்பாக இன்று சேலத்தில் வழக்கறிஞர் மணிகண்டன் தெரிவிக்கையில், ஓ பன்னீர்செல்வம் மீது அதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் புகார் அளிப்பது தொடர்பாக  முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான விவரங்கள் இன்று வெளியிடப்படும் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் இதுகுறித்து தெரிவிக்கையில், ''அதிமுகவில் இணைய வேண்டும் என்பதற்காக புகழேந்தி பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்தார். இது சட்ட விதிகளுக்கு உட்பட்டது தான்" என்று, விளக்கமளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS ISSUE JUNE 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->