அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி? - நயினார் நாகேந்திரன் OPEN TALK! - Seithipunal
Seithipunal


பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சிதான் என்றும்,  அதிமுகவில் பெரும் பதவியில் இருந்து பாஜகவில் இணைந்தேன் என்று கூறினார்.


மேலும் தனக்கு கட்சி பதவி முக்கியம் இல்லை என்று கூறிய அவர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த விஜயதரணிக்கு நிச்சயம் பதவி கிடைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று தெரிவித்த அவர், தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும், தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சி ஆரம்பித்தாலும் அதற்கு சுதந்திரம் உண்டு கூறிய அவர், ந டிகர் விஜய்யை பார்த்து ஆளுங்கட்சி அஞ்சுவதாகவும், கட்சி மாநாட்டிற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK BJP alliance again nainar nagendran OPEN TALK


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->