ச்சீ ச்சீ... இப்படிப் பட்டவர்களை அமைச்சராக வைத்துள்ளீர்களே ஸ்டாலின்... கூச்சமாக இல்லையா? அதிமுக கண்டனம்!
AIADMK Condemn to DMK MK Stalin Ponmudi issue
திமுக அமைச்சர் பொன்முடி அருவருக்கத்தக்க வகையில் மிக கேவலமாக பேசியது கடுமையான சர்ச்சையை கிளப்பியதோடு, பலத்த எதிர்ப்புகளையும் பெற்று வருகின்றன.
இந்த நிலையில், பொன்முடியின் ஆபாச பேச்சை நியாயப் படுத்தும் வகையில் "கேஷுவலா பேசும் போது ஸ்லிப் ஆகி வந்திருக்கும்" சட்ட அமைச்சர் ரகுபதி பேசி இருப்பதும் தற்போது சர்ச்சையுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "உள்ளபடியே ரகுபதிக்கு வெட்கம் என்பது கொஞ்சம் கூட இருக்காதா?
இந்த ஆபாச பேச்சைக் கூட நியாயப் படுத்துகிறார் என்றால், இவர்களின் மனதில் உண்மையில் எவ்வளவு வக்கிரம் இருக்கும்?
இப்படிப்பட்ட இவர்கள் எல்லாம் அமைச்சராக இருக்கும் அரசு தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசு!
இந்த அரசு எப்படி பாலியல் குற்றங்களைத் தடுக்கும் என்ற அச்சம் தமிழ்நாடு பெண்களுக்கு இருக்காதா?
ச்சீ ச்சீ... இப்படிப் பட்டவர்களை அமைச்சராக வைத்துள்ளீர்களே முக ஸ்டாலின்... கூச்சமாக இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
AIADMK Condemn to DMK MK Stalin Ponmudi issue