ஷூட்டிங் மோட்டில் உதயநிதி.. பிண அரசியல் செய்வதுதான் இவர்களது மாடல்.. திமுகவை வெளுத்த அதிமுக..!! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே சென்ற பொழுது சரக்கு ரயிலுடன் மோதியதில் விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து பெங்களூர் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் சரக்கு ரயில் மீது மோதியதில் 3 ரயில்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகியது.

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ரயில் விபத்தில் சிக்கி இருப்பதாக தகவல் அறிந்ததை அடுத்து தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஐஏஎஸ் அதிகாரிகள் அதுல்யா மிஸ்ரா, அர்ச்சனா பட்நாயக், பணீந்திர் ரெட்டி ஆகியோர் ஒடிசா மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

ஒடிசா மாநிலத்திற்கு செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் விபத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் முழு விவரம் தெரியவில்லை. அங்கு சென்ற பிறகு தகவல் தருகிறேன் என கூறிவிட்டு ஒடிசா சென்று அடைந்துள்ளார்.

அவர் ஒடிசா செல்லும்போது கருப்பு நிற கண்ணாடி அடைந்து விமானத்தில் சென்றதை பல சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர். மேலும் விமானத்தில் உட்கார்ந்து கொண்டு செல்பி எடுத்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் அதிமுக தரப்பில் இருந்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. 

அதிமுக மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரமண்டல் ரயில் விபத்து ஆய்வுக்கு விமானத்திற்கு செல்லும் போது கூட சன்கிளாஸ்சஸ் அணிந்து இன்னும் ஷூட்டிங் மோட்டிலேயே இருக்கிறார்.

அவர் அங்கு சென்று 20 மணி நேரத்தில் இதுவரை தமிழகப் பயணிகள் இறப்பு சம்பந்தமாகவோ, காயமடைந்தவர்கள் சம்பந்தமாகவோ எந்த விவரமும் பொதுவெளியில் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. மூத்த அமைச்சர்களை அனுப்பி வைத்திருந்தால் அவசர காலத்திற்காண அனுகுமுறையை அறிந்திருப்பர்.  உதயநிதி ஸ்டாலின் Resume building - கிற்காகவும் - மீடியா வெளிச்சத்திற்காகவும் மட்டுமே இவரது பயணம். அனிதா மரணம் முதல் பாலசோர் கோரமண்டல் ரயில் விபத்து மரணம் வரை பிண அரசியல் செய்வதுதான் இவர்களது அரசியல் மாடல்!" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK criticizes Udayanidhi visit to Odisha


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->