#BREAKING | சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


அண்ணாமலை குறித்து எந்த கேள்விகளும் கேட்காதீர்கள் என்று, செய்தியாளர் சந்திப்பின்போது பதில் அளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், அண்ணாமலை வெளியிட்டுள்ள திமுகவின் சொத்து பட்டியல், ஊழல் சம்பந்தமான கோப்புகள் ஆதாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்க்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அண்ணாமலை குறித்து எந்த கேள்விகளும் என்னிடம் கேட்காதீர்கள். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக தொடர்ந்து அண்ணாமலை பேசி வருகிறார்.

முதிர்ந்த அரசியல்வாதியின் கருத்து குறித்தான கேள்வி கேட்டால் நான் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதை கூட ஒளிபரப்பு செய்ய மறுக்கிறார்கள்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முன்னதாக சேனனி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவிக்கையில், "திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அடுத்த வாரம் சிபிஐ இடம் புகார் அளிக்க உள்ளேன். திமுகவைச் சார்ந்தவர்கள் என் மீது வழக்கு தொடர்ந்தாலும் நான் பயப்பட போவதில்லை.

நான் குற்றம் சாட்டிய நிறுவனங்கள் எதுவும் என்னுடையது இல்லை என்று திமுகவை சார்ந்தவர்கள் எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. இன்னும் பல ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிட தயாராக இருக்கிறோம்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK EPS Say About Annamalai DMKFiles


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->