#PTRfiles:: ரூ.30,000 கோடி விவகாரம்..! சிக்கலில் திமுக அமைச்சர்கள்! சிபிஐயிடம் அதிமுக பரபரப்பு புகார்..!!
AIADMK files complaint against Minister Udayanidhi Sabarisan in CBI
தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் டெல்லியை சேர்ந்த ஊடகவியாளர் ஒருவருடன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கடந்து சில நாட்களாக வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் "உதயநிதியும், சபரீசனும் அவர்களது முன்னோர்களை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். இப்போது இது பிரச்சினையாகியுள்ளது. இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி 20 கோடி என சிறுசிறு குவித்துள்ளனர். அது தோராயமாக ஒரு 30,000 கோடி இருக்கும்" என நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் மற்றும் பாரிமுனையில் உள்ள மத்திய லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு தபால் மூலமாக புகார் ஒன்று அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில் "தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
அந்த ஆடியோவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மருமகன் சபரீசன் மற்றும் அவருடைய மகனும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் 30,000 கோடி ரூபாய்க்கு முறைகேடாக சொத்து சேர்த்து வருவதாக கூறுகிறார்.
அதே போன்று மீண்டும் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி உள்ளது. அதிலும் சபரீசன், உதயநிதி உள்ளிட்டோர் ஊழல் செய்து பல கோடி ரூபாய் குவித்து வருவதாக கூறியுள்ளார். அந்த ஆடியோவில் பேசுவது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தான் என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து ஊழலில் திளைத்திருக்கும் உதயநிதி மற்றும் சபரீசன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக ஜி ஸ்கொயர் விவகாரத்தில் லஞ்ச துறையினர் அண்ணா நகர் திமுக எம்எல்ஏ மோகன் மற்றும் அவருடைய மகன் கார்த்திக் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது திமுக அமைச்சர் உதயநிதி மற்றும் சபரீசன் மீது அதிமுக புகார் அளித்திருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
English Summary
AIADMK files complaint against Minister Udayanidhi Sabarisan in CBI