மிக விரைவில்... திமுகவில் இணைய போகும் ஓபிஎஸ்..!! - அதிமுக ஜெயக்குமார்..!! - Seithipunal
Seithipunal


சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை ஓ.பன்னீர் செல்வம், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் காண சென்று இருந்தனர்.

இந்த கிரிக்கெட் போட்டிக்கு இடையில் சபரீசனும் - ஓ.பன்னீர் செல்வமும் சந்தித்து பேசினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அரசியல் வட்டாரத்தில் இவர்களின் சந்திப்பு கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த சந்திப்புக் குறித்து செய்தியாளர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஜெயக்குமார் "சபரீசன் - ஓபிஎஸ் சந்திப்பின் மூலம் ஓபிஎஸ் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார் என்பது நிரூபணமாகியுள்ளது. ஏற்கெனவே சட்டப்பேரவையில் கருணாநிதி மற்றும் ஸ்டாலினைப் பாராட்டி பேசினார். தற்போது பூனைக் குட்டி வெளியே வந்த கதையாக மக்களுக்கு சபரீசனுடனான சந்திப்பின் மூலம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார். விரைவில் திமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுபவதிற்கில்லை'' என பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Jayakumar said that OPS will join DMK soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->