"அவருக்கு இந்த பதிலே போதும்".. அமர் பிரசாத் ரெட்டிக்கு கே.பி முனுசாமி பதிலடி..!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட பெரியகோட்டப்பள்ளி கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகளும், எம்சிபள்ளி கூட்ரோடு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்கூடம் அமைக்கப்படவுள்ளது.

இப்பணிகளுக்கான பூமி பூஜையில் இன்று வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக துணை பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

அவருடன் கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏ அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி உள்ளிட்ட பல அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அமிர் பிரசாத் ரெட்டி அதிமுகவை விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "அண்ணாமலையின் நண்பர் அமர் பிரசாத் ரெட்டி ஈரோடு இடைத் தேர்தல் பழனிச்சாமியால் தான் தோற்றது என குற்றம் சாட்டியுள்ளது அது ஏற்புடையது அல்ல.

இது தவறான கருத்து. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் ரூ.400 கோடி திமுக செலவு செய்திருந்தாலும் கூட 44,000 வாக்குகளை நாங்கள் பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் உண்மையான வெற்றி அதிமுகவிற்குதான். இந்த தேர்தலில் வாயிலான தமிழகத்தின் உண்மையான எதிர்கட்சி அதிமுக என்பதையும் எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்துள்ளார். எனவே அமிர் பிரசாத் ரெட்டி கூறிய கருத்துக்கு நான் சொன்ன இந்த பதிலே போதும் என நினைக்கிறேன்" என செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK KP Munusamy responds to TN BJP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->