#BigBreaking || டிடிவி தினகரன், சசிகலா, பிரதமர் மோடி - ஒற்றை தலைமை விவகாரத்தில் பழசை தோண்டி எடுத்த ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி.!
aiadmk ops say about one head issue press meet
அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனால், கடந்த இரு தினங்களாக அதிமுகவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தெரிவிக்கையில்,
"ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழுந்தது ஏன் என்று எனக்கே தெரியவில்லை. எந்த அதிகார ஆசையும் எனக்கு இல்லை. ஒற்றை தலைமை வேண்டும் என்ற புதிய பிரச்சினையை உருவாக்கியவர் அதிமுக நிர்வாகி மூர்த்தி.
என்னையும், தொண்டர்களையும் பிரிக்க முடியாது. துணை முதல்வர் என்பது அதிகாரமற்ற பதவி. பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.
அதிமுகவில் தொண்டர்களால் தேர்தல் மூலமாகவே பொதுச்செயலாளரை உருவாக்க முடியும் என்பது கட்சி விதி. தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளால் பொதுச்செயலாளரை உருவாக்க முடியாது என்றார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச்செயலாளர் என்ற பதவி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது.
சசிகலாவுக்கு அன்று பொது செயலாளர் பதவி கொடுத்தது தற்காலிக ஏற்பாடுதான். அதிமுகவின் நிறைந்த பொதுச்செயலாளர் அம்மா அவர்கள் மட்டுமே.
டிடிவி தினகரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அரசை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியும், நானும் இணைந்தோம். 2016ல் அதிமுக ஆட்சி பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் அரசை காப்பாற்ற வாக்களித்தோம்" என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.
English Summary
aiadmk ops say about one head issue press meet