நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ள அ.தி.மு.க., மூத்த தலைவர் தம்பிதுரை..!
AIADMK senior leader Thambidurai meets Finance Minister Nirmala Sitharaman
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அ.தி.மு.க., மூத்த தலைவர் தம்பிதுரை, இன்று பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேசினார்.
இதற்கு முன்னர் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் டெல்லிக்கு சென்றார். அங்கு மத்திய அமைச்சர் அமித்- ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது தொடர்பாக இரு தரப்பினரும் பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதனை இ.பி.எஸ்., அதை மறுத்துள்ளார்.
இந்நிலையில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதி என்றும், அதற்கு வசதியாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என்றும்தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதற்கிடையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அ.தி.மு.க., மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான தம்பிதுரை இன்று சந்தித்துப் பேசியுள்ளமை பேசும் பொருளாக மாறியுள்ளது.
English Summary
AIADMK senior leader Thambidurai meets Finance Minister Nirmala Sitharaman