#BREAKING:: பாதுகாத்துக் கொள்ளுங்கள்.. "கூட்டணி உறவு வேறு பாதையில் செல்லும்" - பாஜகவுக்கு அதிமுக எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்து கொள்ளும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

சில தினங்களுக்கு முன்பு பாஜக மாநில ஐடி விங் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்த நிலையில் அவரைத் தொடர்ந்து அக்கட்சியின் மாநில ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அதே போன்று நேற்று பாஜகவின் ஓ.பி.சி அணி மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய், பாஜக முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் இன்று தமிழக பாஜகவை சேர்ந்த உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் லதா மற்றும் தாம்பரம் பகுதி பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் வைதேகி ஆகியோர் எடப்பாடி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். 

இவ்வாறு பாஜககவினர் பலர் அதிமுகவில் இணையும் நிகழ்வு அரங்கேறி வருகிறது. இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உள்ளது. பாஜகவில் இருந்து ஆட்களை சேர்த்து தங்களை பெரிய கட்சியாக காட்டிக் கொள்ளும் நிலையில் திராவிட கட்சிகள் உள்ளது என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அவர் பேசிய சில மணி நேரத்தில் கோவில்பட்டியில் பாஜக இளைஞரணி நிர்வாகிகளால் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படம் தீட்டு கொளுத்தப்பட்டது. இதனை அடுத்து 50க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கோவில்பட்டி டிஜிபி அலுவலகம் முன்பு அண்ணாமலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதிமுகவை சேர்ந்த பல நிர்வாகிகள் பாஜகவின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படம் எரித்ததற்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர் "கூட்டணியை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய இடத்தில் பாஜக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உருவ படத்தை எரித்த பாஜகவினரின் செயல் வேதனை கூறியது கண்டனத்துக்குரியது. பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டணி உறவு வேறு பாதையில் செல்லும்" என அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK warns BJP to protect alliance


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->