முடிவுக்கு வந்த இழுபறி.. பாஜக கோட்டையில்.. இறங்கி அடிக்கும் I.N.D.I கூட்டணி.!!
Alliance finalized in Bihar indi alliance
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய இண்டி கூட்டணியில் முக்கிய அங்கமாக பீகார் மாநில முதலமைச்சரின் நிதிஷ்குமார் திடீரென அந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜக தலைமை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வை எதிர்க்கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் நிதீஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதனால் பீகாரில் பாஜகவின் கை ஓங்க தொடங்கியது. இந்நிலையில் பீகாரில் லல்லு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கமாக திகழ்வதால் காங்கிரஸ் கட்சிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கும் இடையே கூட்டணி இட பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில் தொகுதி பங்கீடுகளை சரி செய்வதில் தொடர்ந்து வந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனின் கட்சி 3 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
மொத்தம் 40 தொகுதிகளை கொண்ட பிகார் மாநிலத்திற்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நடைபெறும் கயா உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கு ஏற்கனவே ராஷ்ட்ரிய ஜனதா தளம் வேட்பாளர்களை அறிவித்து அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு பீகாரில் ஆதரவு பெருகி இருப்பதால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Alliance finalized in Bihar indi alliance