ஒடிஷா முதல்வர் பதவியேற்பு விழாவின் போது அமித்ஷா செய்த செயல் !!
amit shahs action during the swearing ceremony
தற்போது ஒடிசா மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி தரவு செய்யப்பட்டு பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழா நேற்று ஒடிசாவில் நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் பெருந்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பதவியேற்பு விழாவில் ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கும் பங்கேற்றார். இந்த விழாவிற்கு நவீன் பட்நாயக் வருவதை கண்ட அமித் ஷா அவர் ஓடி சென்று கட்டி தழுவி உற்சாக வரவேற்பு அளித்தார்.
தற்போது ஒடிஷாவின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் சரண் மாஜி அவர்களுக்கு ஆளுநர் ரகுபர் தாஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோகன் சரண் மாஜி நடந்து முடிந்த ஒடிஷா சட்டமன்றத் தேர்தலில் கியோஞ்சார் தொகுதியில் 87 ஆயிரத்து 815 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பிஜேடியின் மீனா மாஜியை தோற்கடித்தார். வரலாற்றில் முதல் முறையாக பிடிஷாவில் பாஜக ஆட்சி அமைக்கிறது.
அப்போது அந்த பதயேற்பு விழாவிற்க்கு வந்த ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஓடி சென்று வரவேற்றார். தற்போது புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள மோகன் சரண் மாஜியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நவீன் பட்நாயக் விழா மேடைக்கு வந்திருந்தார். நவீன் பட்நாயக் விழா மேடைக்கு அருகில் வந்தவுடன், அமித்ஷா அவரிடம் வந்து அன்புடன் வரவேற்றார்.
ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் ஆட்சி செய்து வந்தார். தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் பட்நாயக்கின் ஆட்சி கலைந்தது. தனது ஆட்சி கவிழும் என நவீன் பட்நாயக் சிறிதும் கூட எதிர்பார்க்க வில்லை. இங்கு பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் மீனா மாஜி போட்டியிட்டார்.
மீனா மாஜி பாஜக வேட்பாளர் மோகன் சரண் மாஜியிடம் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோவில்யை சந்தித்தார். இந்த பதவியேற்பு விழாவின் போது நவீன் பட்நாயக் மேடைக்கு வந்தபோது, அமித் ஷா அவரை அன்பாக வரவேற்றார்.
English Summary
amit shahs action during the swearing ceremony