அதிமுகவில் இணையும் அமமுக ஓபிஎஸ், சசிகலா? டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!
AMMK ADMK TTV Dhinakaran
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தாவது, "டாஸ்மாக் அலுவலகங்களிலும், மதுபான ஆலைகளிலும் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி அளவிற்கு ஊழல் இடம்பெற்றுள்ளது.
அதேபோல், சென்னை மாநகராட்சியின் கழிப்பறைத் திட்டத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த ஊழல்கள் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் யார் ஆட்சி?
2026 தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த தினகரன், "வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சிக்கு வரும். அதிமுகவும் NDA-வில் சேர வேண்டும். ஆனால் அது பழனிசாமியுடன் வருமா, பழனிசாமி இல்லாமலா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். பாஜகவால் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்த முடியும்" என்றார்.
மேலும், அதிமுகவில் ஓ.பி.எஸ், சசிகலா இணைந்தாலும், தாம் தனிக்கட்சி தொடங்கியதால், தொண்டர்களின் கருத்து கேட்ட பிறகே முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட்டில் "ரூ" என்ற எழுத்தை மாற்றியிருப்பதை சிறுபிள்ளைகள் விளையாட்டாக உள்ளது என்றும் டிடிவி தினகரன் விமர்சித்தார்.