ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான ஆலோசனையை நடத்திய டிடிவி & இபிஎஸ்! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி சந்திர பாண்டியன் திருமண மண்டபத்தில், இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தலைமை வகித்து, நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தெரிவிக்கையில், வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். 

ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால், அது பழனிச்சாமி என்ற சுயநலவாதி இருக்கும் வரை ஒருங்கிணைப்புக்கு வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார். 


இதற்கிடையே, தேனி மக்களவைத் தொகுதி தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்ததற்கான காரணம் குறித்து, தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களிடம் இன்று எடப்பாடி பழனிசாமி கலந்த ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, தேனி தொகுதிக்கு நிறைய திட்டங்களை நம் ஆட்சியில் கொடுத்துள்ளோம், ஆனாலும் நாம் டெபாசிட்டை இழந்தது ஏன் என்று நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு, தங்க தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரன் போன்ற பிரபலங்களே நம் தோல்விக்கு காரணம் என்று நிர்வாகிகள் பதிலளித்தனர்.

இரட்டை இலையே நம்ம பக்கம் இருக்கும்போது, தேனியில் யார் நின்றாள் என்ன? இரட்டை இல்லை சின்னத்தை விட என்ன பிரபலம்? என்று நிர்வாகிகள் இடம் எடப்பாடி பழனிச்சாமி பதில் கேள்வி கேட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK TTV and ADMK EPS Theni meet


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->