பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமாக அன்பில் மகேஷின் பதவிக்காலம் இருக்கும்!!! - முதலமைச்சர் ஸ்டாலின்....
Anbil Mahesh s tenure will be the golden era of the school education department Chief Minister Stalin
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் "பெற்றோர்களைக் கொண்டாடுவோம்" என்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில் 'அப்பா' என்ற செயலியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியோடு வெளியிட்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது," ஒவ்வொரு மாணவரும் தமிழ்நாட்டில் சொத்து. கல்வித்துறையில் சாதனைகளை திராவிட மாநில அரசு செய்து வருகிறது.

அன்பில் மகேஷ்:
பள்ளிக்கல்வித்துறையை இந்திய அளவில் இரண்டாம் இடத்துக்கு உயர்த்தியவர் அன்பில் மகேஷ். அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியில் இருக்கும் காலம் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீது இருக்கும் அக்கறை தமிழக அரசுக்கும் உள்ளது. இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கை என்பது சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழுக்கும் , தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் வேட்டு வைக்கும் கொள்கை.
கல்விக் கொள்கை:
தேசியக் கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம். பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன். கையெழுத்திடும் அந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன். எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல... மொழியை திணிக்க நினைத்தால் எதிர்ப்போம். எங்கள் மொழியை அழிக்க, ஆதிக்கம் செலுத்த நினைத்தால் விடமாட்டோம்." என தீர்மானத்தோடும் உறுதியோடும் தெரிவித்திருந்தார்.
English Summary
Anbil Mahesh s tenure will be the golden era of the school education department Chief Minister Stalin