திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு : சந்திரபாபு சத்தியம் செய்வாரா?....ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆவேசம்!
Animal Fat in Tirupati laddu Will Chandrababu Swear Y.S.R. Congress obsession
ஆந்திர பிரதேச மாநிலம், அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொதுக் கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறையாற்றினார்.
அப்போது, ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு கூட தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டதாகவும், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக பேசி இருந்தார்.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், சந்திரபாபு நாயுடு தனது கருத்துகளால் திருப்பதி கோவிலின் புனிதத்தையும், பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் சேதப்படுத்தியுள்ளார்.
சந்திரபாபு கூறிய கருத்து மிகவும் மோசமானது என்று குறிப்பிட்டுள்ள அவர், சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நானும், எனது குடும்பத்தினரும் சத்தியம் செய்ய தயாராக உள்ளதாக கூறியுள்ள அவர், சந்திரபாபு சத்தியம் செய்வாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Animal Fat in Tirupati laddu Will Chandrababu Swear Y.S.R. Congress obsession