உணவகம் அபகரிப்பு! அண்ணாமலை மீது பாஜக முன்னாள் நிர்வாகி போலீசில் புகார்! - Seithipunal
Seithipunal


கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது, முன்னாள் பாஜக நிர்வாகி பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

மேலும், கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீதும் முன்னாள் பாஜக நிர்வாகி அண்ணாதுரை புகார் அளித்துள்ளார்.

பாஜகவின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளராக இருந்த அண்ணாதுறையை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தான் பாஜகவில் இருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தான் நடத்தி வந்த கடையை பாஜகவினர் அபகரித்து விட்டதாக கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்ணாதுரை புகார் அளித்துள்ளார்.

தான் வாடகைக்கு எடுத்திருந்த உணவகத்தை அபகரித்து பாஜக சேவை மையம் தொடங்கியிருப்பதாக, அண்ணாமலை மற்றும் உத்தம ராமசாமி மீது அண்ணாதுரை புகார் அளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annadurai Complaint against Annamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->