அண்ணாமலை விளக்கம்!!! கூட்டணிக்கு தவம் கிடப்பவர்கள் அ.தி.மு.க என்று குறிப்பிடவில்லை....
Annamalai explained that he did not mention AIADMK Those who are penitent for the alliance
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக் கோவையில் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில்,'பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கத் தமிழகத்தில் தவம் கிடக்கிறார்கள்' என்று தெரிவித்திருந்தார். இந்த வார்த்தை அரசியல் கட்சியினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே அண்ணாமலை நேற்று கோவை விமான நிலையம் வந்தார். அப்போது பத்திரிகை நிபுணர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாவது, "நானும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி குறித்து தெளிவாகத் தெரிவித்திருக்கிறோம். நான் அளித்த பேட்டியில் அ.தி.மு.க. என்ற பெயரை நான் எங்கும் குறிப்பிடவில்லை.
ஆனால் அதுபற்றி விவாதத்துக்காகப் பலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.நான் சொன்னதையும், எடப்பாடி பழனிசாமி சொன்னதையும் திரித்துத் திரித்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க.வைப் பற்றி நான் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறேன். அ.தி.மு.க.வை பற்றி எடப்பாடி பழனிசாமியும் தெளிவாகப் பேசி இருக்கிறார்.
அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் பா.ஜ.க.வை திட்டுவதையே நோக்கமாகக் கொண்டு இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார் . இந்தத் தகவலை கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் .
English Summary
Annamalai explained that he did not mention AIADMK Those who are penitent for the alliance